எக்கிய ராஜ்ய என்கின்ற ஒற்றையாட்சி முறைமையை இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்க்கிறது என்றும் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டதே சமஸ்டி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே என்றும், சமஸ்டியை மிக மோசமாக கேலி செய்தவர்களே இன்று சமஸ்டியை பற்றி பேசுகிறார்கள் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம…

எக்கிய ராஜ்ய என்கின்ற ஒற்றையாட்சி முறைமையை இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்க்கிறது என்றும் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டதே சமஸ்டி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே என்றும், சமஸ்டியை மிக மோசமாக கேலி செய்தவர்களே இன்று சமஸ்டியை பற்றி பேசுகிறார்கள் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரம் தெரிவித்துள்ளார்.நாகர் கோவிலில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.சமஷ்டி கோரிக்கைஅவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கப்பட்டதே சமஷ்டி கோரிக்கைக்காகவே ஆகும்.தமிழரசு கட்சியை சமட்டி கட்சி என்று கேலி செய்தவர்கள் தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.1971 ஆம் ஆண்டு ஜீ.ஜி பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. எமது தலைவர் இருந்திருந்தால் சமஷ்டி கோரிக்கை எவ்வளவு மோசமானது என்பதை என்னை விட மிகத் திறமையாக பேசி இருப்பார் என அவர் நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கின்றார். ஆகவே சமஸ்டியை மிக மோசமாக விமர்சித்தவர்களே இன்றைக்கு மக்களை பிழையாக வழி நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.ஒற்றையாட்சி முறைமை எங்களுடைய கட்சியினுடைய முழுமையான கொள்கையே சமஷ்டி ஆட்சி ஒன்று உருவாக்க வேண்டும் என்பது தான்.எக்கிய என்ற சொல்லிற்கு அர்த்தம் ஒன்று ராஜ்ய என்ற சொல்லுக்கு அர்த்தம் நாடு. ரஜ்ய என்று சொன்னால் ஆட்சி முறை. இப்போது இருக்கின்ற அரசியல் அமைப்பிலே சொல்லப்பட்டிருப்பது எக்கிய ராஜ்ய என்பதாகும்.ராஜ்ய என்ற சத்தம் தமிழ் மக்களுக்கு புரியாமல் இருந்தாலும் தமிழை விட சிங்களம் கூடுதலாகவே தெரிந்திருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு இது நன்றாகவே தெரியும்.இவர் தொடர்ச்சியாக மக்களைப் பிழையாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.