இலங்கையின் அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள், இனப்படுகொலைகள், மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் என்பன இலங்கை அரசியலில் அதன் வரலாற்று ரீதியான தவறான வரலாற்றியல் மனப்பாங்குகளில் இருந்தே உருப்பெற்றுன. மகாவம்சம் என்ற புனைகதை வரலாற்று நூலே இவை அனைத்துக்குமான அடிப்படைக் காரணி…

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள், இனப்படுகொலைகள், மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் என்பன இலங்கை அரசியலில் அதன் வரலாற்று ரீதியான தவறான வரலாற்றியல் மனப்பாங்குகளில் இருந்தே உருப்பெற்றுன. மகாவம்சம் என்ற புனைகதை வரலாற்று நூலே இவை அனைத்துக்குமான அடிப்படைக் காரணியாகவுள்ளது. அந்த நூலே கி.பி நான்காம் நூற்றாண்டில் மகாசேன மன்னனின் மனைவியான அனுராதேவியின் சதியினால் மகா ஞான பௌத்த துறவியான சங்கமித்தர் என்ற தமிழ் துறவி கொல்லப்பட்டதிலிருந்து இற்றைவரையும் அந்த நூலே படுகொலைகளை வழிநடத்திச் செல்கிறது. மகாநாமதேரர் என்ற துறவியின் விருப்புவாதம் எப்படி இலங்கைத்தீவில் மகாவம்சம் என்ற நூலுருவில் சிங்கள பௌத்தர்களின் இலட்சியவாதமாக, இனவாதமாக தோற்றம் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது என்பதனை படுகொலைகளுக்கு பின்னே உள்ள அரசியலில் இருந்து சற்று பார்த்து விடுவோம்.

மகாவம்சம் என்ற நூலின் அரசியல் ஆதிக்கத்தை நவீன அரசியல் வரலாற்றில் இனவாதத்தை கிளப்பிவிட்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவையே பௌத்த மதத்திற்கு தீங்கு செய்கிறார் என்று குற்றம் சாட்டி பௌத்த துறவியான தல்டுவே சோமராம தேரால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த பௌத்த இளம் துறவி புத்திரகித்திர தேரோவால் வழிநடத்தப்பட்டு ஓசி கொரியாவின் சதியினால் இந்தக் கொலை அரங்கேறியது. ஆயினும் பிரதான சூத்திரதாரி அந்த படுகொலையில் இருந்து தப்பிவிட்டார் என்பதைவிட தப்ப விடப்பட்டார் என்பதுவே உண்மையாகும். அதுமட்டுமல்ல இந்தக் கொலைக்கான தீர்ப்பாக சோமநாத தேரருக்கு மரணதண்டனையும், புத்துரகித்ர தேரருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

பண்டாரநாயக்காவைக் கொலை செய்த பௌத்த துறவி. சோமராம தேரர் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், மதம் மாறி கிறிஸ்தவராக ஞானஸ்நானம் பெற்று, "பீட்டர்" (Peter) என்று பெயரை மாற்றிக்கொண்டார். அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர் அக்காலத்தில் சிறைச்சாலையின் கிறிஸ்தவ போதகராக (Christian Prison Chaplain) பணியாற்றிய ஆங்கிலிக்கன் பாதிரியாரிர் திரு. மத்தேயு பீரிஸ் (Rev. Fr. Mathew Peiris)ஆவார். மரணத்தின் போது சோமராம தேரர் பீட்டர் என்ற கிறிஸ்தவனாகத்தான் வெளிக்கடை சிறைச்சாலையில் 06-07-1962ஆம் ஆண்டு துாக்கிலிடப்பட்டார். தூக்கில் தொங்கியபோது பௌத்த துறவி என்றில்லாமல் ஒரு கிறிஸ்தவனாக தன்னை மாற்றி தன்னால் பௌத்த மதத்திற்கோ, பௌத்த மாசங்கத்திற்கோ வரலாற்றில் அபகீர்த்தி ஏற்படாத வகையில் கிறிஸ்தவனாக இறப்பதனையும் அந்த மகாவம்சம் என்ற சிங்கள - பௌத்த இலட்சியவாத நூலும் பௌத்த மகாசங்கங்களுமே பின்னே இருந்தன என்ற சிங்கள பௌத்த தத்துவார்த்த கருத்தியல் வலிமை எவ்வாறு ஒவ்வொரு சிங்கள பௌத்தனையும் இறுக பற்றி பிடித்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையும் இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டும். 8 இடங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய தாக்குதல் இந்தப் பின்னணியில் தான் இலங்கையில் 2019 யூலை 31 திகதி புனித ஈஸ்டர் ஞாயிறு நாளன்று திட்டமிட்டு 8 இடங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கருவிகளாக பயன்படுத்தி அடுத்தடுத்து தொடராக கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயம்(கொச்சிக்கடை), நீர்கொழும்பு புனித செபஸ்தியார் தேவாலயம்(கட்டுவாப்பிட்டிய), மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் (Zion Church) ஆகிய மூன்று தேவாலயங்களிலும், கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டல் (Shangri-La Hotel), கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல் (Cinnamon Grand Hotel), கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் (The Kingsbury Hotel) ஆகிய மூன்று சொகுசு ஹோட்டல்கள் மற்றும் டிராபிக்கல் இன் விடுதி (Tropical Inn) – தெஹிவளை மகாவில உத்தியான வீதி, தெமட்டகொட, கொழும்பு (காவல்துறையினர் சோதனையிடச் சென்றபோது தற்கொலை குண்டு வெடித்த இடம்). ஆகிய இரண்டு ஏனைய இடங்களிலும் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தினார்கள்.

இலங்கை தீவில் இஸ்லாமிய சமூகத்தினால் ஒரு ஆயுதப் போராட்டத்தை ஒருபோதும் நடத்த முடியாது. இஸ்லாமியர்களுக்கு வெளியில் இருந்து வழங்குதலை செய்யக்கூடிய ஆகக் கிட்டிய இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தானும், பங்களாதேசமும் 2000 மைல்களுக்கு அப்பால் உள்ளது. இந்த நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு தேவையான ஆயுத தளவாடங்களை வெளியில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வர முடியாது. அது நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியமற்றது.அத்தகைய நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை இலங்கை தீவுக்குள் நடத்த முடியாது. ஏனெனில் ஏற்கனவே தமிழிழ விடுதலைப் புலிகள் என்ற மாபெரும் இயக்கத்தின் பெரும் கட்டமைப்புகள் எல்லாம் முறியடித்து யுத்தத்தில் தோற்கடித்த இலங்கை புலனாய் துறவினருக்கு இஸ்லாமியர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும், கண்காணிப்பதும் பெரிய காரியம் அன்று. ஆகவே இலங்கை தீவுக்குள் இருக்கின்ற இருக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குள் இத்தகைய ஒரு தாக்குதலை யாராலும் நடத்த முடியாது. அத்தகைய ஒரு சூழலில் 2019ம் ஆண்டு இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் பெயரில் இலங்கை அரச படைகளின் அனுசரணையுடன் இலங்கை அரசியல் தலைவர்களினால்த் தான் அத்தகைய ஒரு சதித்தாக்குதலை நடத்த முடியும், அப்படித்தான் ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தற்கொலை குண்டுதாரிகள் 9 பேர் உள்ளிட்டு மொத்தம் 269 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 38 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். 231 இலங்கை குடிமக்களும் அடங்குவர் கொல்லப்பட்ட 38 வெளிநாட்டவர்களில் 11 பேர் இந்தியார், 6 பேர் பிரிட்டன் இவர்களில் இருவர் அமெரிக்க-பிரிட்டிஷ் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள். 4 பேர் சீனர்கள், 3 பேர் டென்மார்க் நாட்டைச் சேரந்தவர்கள், இவர்கள் டென்மார்க்கின் முன்னணி கோடீஸ்வரரான ஆண்டர்ஸ் ஹோல்ச் போவ்சனின் குழந்தைகள், 3 பேர் அமெரிக்கார்கள், 2 பேர் ஸ்பெயின், 2 பேர் சவூதி அரேபியார், 2 துருக்கி பொறியியலாளர்கள், ஒருவர் நெதர்லாந்து, ஒருவர் பங்களாதேஷ், 1 நபர் ஜப்பான், 1 நபர் போர்ச்சுகல், 1 நபர் சுவிட்சர்லாந்து, இத்தாக்குதல்களில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.25 முக்கிய சந்தேக நபர்கள் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் நேரடிச் சந்தேக நபர்கள் மற்றும் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் 25 முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு விசேட நீதிமன்றத்தில்(Trial-at-Bar) தனியாக வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன.இதில் பிரதான சந்தேக நபர்கள் அல்லது முக்கிய சூத்திரதாரிகளாக,1. முகம்மது இப்ராஹிம் முகம்மது நௌபர் (நௌபர் மௌலவி - தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் அரசியல்/ஆன்மீக வழிகாட்டியாகக் கருதப்படுபவர்) 2. யூசுப் முகம்மது இப்ராஹிம் (கொழும்பு விடுதிகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இன்ஷாப் மற்றும் இல்ஹாம் ஆகியோரின் தந்தை / கொழும்பு வர்த்தகர்) 3. முகம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா 4. அப்துல் லத்தீப் அமீர் அஹமட் 5. முகம்மது ரமீஷ் முகம்மது சஜித் ஆகியோர் அடையாளத்தைப் படுத்தப்படுகின்றனர். இவர்களோடு தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் சஹ்ரான் குழுவோடு தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களான,1.ஹயாத்து முகம்மது மிலஹான் (உளவுத்துறை அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் படுகொலையுடன் தொடர்புடையவராகக் கூறப்படுபவர்) 2.முகம்மது அன்வர் முகம்மது ரிஸ்கான் 3.எம். எஸ். முகம்மது சாஜித் 4.முகம்மது முஸ்தபா முகம்மது ஹாரிஸ் 5.காலிப் சமீர் 6.சஜஹான் மாஸ்டர் (முகம்மது சனாஸ்தீன்) 7.ராசிக் ராசா ஹுசைன் 8.முகம்மது மன்சூர் முகம்மது அஸ்வர் 9.பாரிஸ் முகம்மது பாருக் 10.முகம்மது ஆதில் 11.அப்துல் மனாப் முகம்மது பிர்தௌஸ் 12.முகம்மது மில்ஹான்13.அபூபக்கர் சித்திக் 14.முகம்மது பரஹான் 15.முகம்மது நிஸார் கபூர் 16.சான் முகம்மது ராசிக் 17.அஹமது தமீம் யுஸ்ரி 18.முகம்மது ஹக்கீம் 19.முகம்மது சாகீர் 20.அப்துல் காதர் பாஸில் அகிய இந்த 25 பேருக்கு எதிராக கொலைச் சதி, பயங்கரவாதத்திற்குத் தூண்டுதல், ஆயுதங்களைச் சேகரித்தல் உள்ளிட்ட சுமார் 23,000-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை இதில் தற்கொலை குண்டுதாரிகளின் உறவினர்கள் மற்றும் ஐஎஸ் (IS) அமைப்போடு தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களும் அடங்குவார்கள். கடந்தவாரம் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை மேற்கொண்ட கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் (Colombo Permanent High Court Trial-at-Bar) நீதிபதிகளான பிரியந்த லியனகே (Priyantha Liyanage) இந்த விசாரணை அமர்வின் தலைவர், திலகரத்ன பண்டார (Thilakarathna Bandara), விராஜ் வீரசூரிய (Viraj Weerasuriya) ஆகிய மூவரடங்கிய பெஞ்ச் சிறப்பு உயர் நீதிமன்றம் 2026யூலை 31 அன்று வழங்கிய தீர்ப்பில் குற்றவியல் அலட்சியம் மற்றும் முன்னதாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமாசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.முன்னைய அரசாங்க ஆட்சிக்காலத்தில் 2022ல் இவ்வழக்கிலிருந்து இவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர் என்பதுவும் கவனத்திற்கு உரியது. எனினும் மேல்முறையீட்டு விசாரணைக்குப் இவர்களை கொண்டுவந்து நிறுத்தப்பட்டதனால் உண்மை வெளிக் கொணரப்பட்டு இந்த புதிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   இலங்கையில் மரண தண்டனை நடைமுறையில் இருந்தாலும், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை. தூக்குத்தண்டனை முனைமை சட்டப்படி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் இந்த தண்டனையை பொதுவாக ஆயுள் தண்டனையாக மாற்றப்படுவதுதான் வழக்கம்.

ஆயினும் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்ய உரிமை பெற்றுள்ளனர்.அதன்பிரகாரம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமாசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரின் சார்பில் வழக்கறிஞர் சமிந்த அத்துகோரல இந்தத் தண்டனையை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மேல்முறையீடு செய்யவுள்ளது.

மேற்படி விசாரனைத் தீர்ப்பில் அதாவது மூவரடங்கிய நீதிபதிகள் விசாரணையில் அமர்வின் தலைவரான நீதிபதி பிரியந்த லியனகே மற்றும் நீதிபதி திலகரத்ன பண்டார ஆகிய இரு நீதிபதிகளும் பூஜித் ஜெயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்து மரண தண்டனை வழங்கினார்கள்.ஆனால் நீதிபதி விராஜ் வீரசூரிய மட்டும் அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் கொலை செய்யும் நோக்கம் இருக்கவில்லை என்றும், குண்டுதாரிகளுடன் அவர்களுக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை எனவும் கூறி, இருவரையும் விடுவிக்க வேண்டும் என மாறுபட்ட (Dissenting) தீர்ப்பை வழங்கினார். விசாரணை முடிவுகளில் 2:1 என்ற பெரும்பான்மையினால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரணதண்டனை தீர்ப்பாகியது. இந்த மூவரடங்கிய பெஞ்ச் சிறப்பு உயர் நீதிமன்றம் நீதிபதி விராஜ் வீரசூரியவின் மாறுபட்ட தீர்ப்பை (Dissenting Judgment) மேல்முறையீட்டில் முக்கிய வாதமாகப் பயன்படுத்த பாதுகாப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளது.பொது மன்னிப்பு என்ற போர்வையில் வெளியே வரும் வாய்ப்பு அதே நேரத்தில் இலங்கையின் அரசியலமைப்பில் இலங்கை ஜனாதிபதியினால் எத்தகைய குற்றவாளிகளுக்கும் மன்னிப்பு வழங்க முடியும் என்ற அரசியல் சாசன ஏற்பாட்டின் பிரகாரம் எதிர்காலத்தில் இவர்களுக்கு விடுதலை அளிக்கப்படுவதும் உறுதியானது. இதற்கு நல்லதொரு உதாரணமாக சாவகச்சேரி மிருசுவில் 8 தமிழ் மக்கள் படுகொலை வழக்கில் கொழும்பு உச்சநீதிமன்றத்தால் 2015 யூன் 25ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் சிறப்புப் படை அதிகாரி சுனில் ரத்நாயக்கவிற்கு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி 2020 மார்ச் 26 அன்று பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார் என்பதனை இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. ஆகவே இலங்கை நீதிமன்றம் வழங்குகின்ற தீர்ப்புகள் எல்லாம் நடைமுறையில் அரசியல் தேவைகளுக்காக இல்லாத அளிக்கப்பட்ட வரலாறு நிறையவே உள்ளது.

அதே நேரத்தில் இப்போது இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இடதுசாரிகள் என்ற பெயரில் தோற்றம் பெற்றிருக்கும் புதிய அரசியல் அதிகாரம் வர்க்கம் தமது அரசியல் எதிரிகளை வேட்டையாட பின் நிற்கப்போவதில்லை. ஆயினும் அந்த வேட்டையில் குறுக்கே மகாசங்கங்கள் நிற்பதுதான் நிர்வாகத் துறைக்கும், நீதித்துறைக்கும் பெரும் இடையூறாக உள்ளன என்பதனையும் இங்கே கருத்துக் கொள்ள வேண்டும்.கோட்டாபய கைதுக்கு பின்னால் உள்ள பிரச்சினை எது எப்படி இருப்பினும் புதிய ஆளும் குலாமும் பழைய ஆளும் குலாமும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஏதோ ஒரு புள்ளியில் கைகோர்க்கவும், தமக்குள் சமரசம் செய்யவும், விட்டுக்கொடுப்புகளைச் செய்யவும் தயாராகவே இருப்பர் என்பதுதான் ஆட்சிக்கலையின் உண்மை தத்துவமாகும்.

இப்போது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதையோ அல்லது தடுப்புக் காவலில் வைப்பதையோ தடுக்குமாறு கோரி முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நிராகரிக்கப்படும் வரை கோட்டாபாயவை கைது செய்ய முடியாது. அதே நேரத்தில் மகாவம்ச நூலின் ஆறாம் அத்தியாயத்தில் துட்டகைமுனுவுக்கு பின்னர் இலங்கைத் தீவை ஒன்று படுத்தியவர்கள் என்று பெயர் பொறிக்கப்பட்ட கோட்டாபாயவையோ, ராஜபக்சவையோ கைது செய்யப்படுவதை பௌத்த மகாசங்கம் அனுமதிக்கப் போவதில்லை.மாறாக மகாநாயக்கர்களையும், மகா சங்கத்தையும் மீறி அப்படி ஒரு கைது நடந்தால் எம்பிபி அரசாங்கத்தினுடைய ஆயுட்காலம் வெகு காலத்துக்கு நீடிக்காது. ஆகவே பண்டாரநாயக்க கொலையில் பிரதான சூத்திரதாரி தப்பியது போன்று ஈஸ்டர் குண்டு தாக்குதலிலும் பிரதான சூத்திரதாரிகள் தப்ப விடப்படுவார்கள் என்பதே உண்மையாகும்.

அதே நேரத்தில் மூன்றாவதாக நீதிமன்ற விசாரணையில் இருக்கும் முன்னாள் உளவுத்துறைத் SIS) ம தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னை கைது செய்வதை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட்ட சுரேஷ் சலேஅதற்கிடையில் அவர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்து தென்னிலங்கையில் ஒரு கொதி நிலையை தோற்றுவித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீதான விசாரணையும் மந்தகதியிலேயே நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதே நேரத்தில் எம்பிபி அரசாங்கம் தனது கடமைக்காக இவருக்கும் நீதிமன்றத்தின் ஊடாக மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்படலாம். ஆனால் தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது.

அது ஒருபுறம் இருக்க ஈஸ்டர் குண்டு தாக்குதல் விசாரணைகளின் போது முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிற உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பெரும் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால் அந்தக் காலப்பகுதியில் இலங்கை படைத்துறையினர் இந்த குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில் அன்றைய காலத்தின் ஜனாதிபதியே முப்படைகளின் தலைவர் என்ற அடிப்படையில் அவர் பொறுப்பு கூற வேண்டியவரும் பொறுப்புடையவரும் ஆவார். ஆனால் அன்றைய இலங்கை ஜனாதிபதி இந்தப் பொறுப்புக் கூறலில் இருந்து விடுவிக்கப்பட்ட விட்டார் என்ற ஒரு உண்மையை யாவரும் கவனிக்க தவறுகின்றனர்.ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்போது ஈஸ்டர் குண்டு தாக்குதலை தடுத்து நிறுத்த தவறிய குற்றத்திற்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமாசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதனை கத்தோலிக்க திருச்சபை வரவேற்றுள்ளது. எனினும் இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருக்கும் "உண்மையான சூத்திரதாரிகள் மற்றும் பெரிய சதி" இன்னும் முழுமையாக வெளிவரவில்லை என்று இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆயினும் திருச்சபையின் எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளும் சதிகாரர்களும் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள், அதற்கான அரசியல் சூழமைவும் இலங்கை தீவில் இல்லை, பௌத்த சிங்கள மக்கள் நம்பும் கதாநாயகர்களை தண்டிக்கும் அதிகாரம் இலங்கை நீதித்துறைக்கு இல்லை. என்பதுவே இலங்கை அரசியல் சமூக பண்பாட்டியலில் உள்ள எழுதப்படாத சட்டமும் நடைமுறையும் ஆகும்.

அதே நேரத்தில் அதையும் மீறி நீதித்துறை செயற்பட்டாலும் நீதித்துறையின் தீர்ப்புகள் தண்டனைகளாக மாற முடியாத அரசியலமைப்பு தடையாக ஜனாதிபதியின் விசேட அதிகாரம் உள்ளது. ஆகவே இலங்கை டிவில் நீதியை நிலை நாட்டுவது என்பது ஜனாதிபதியின் கரங்களிலேயே உள்ளது அதை நீதித்துறையின் கரங்களில் அல்ல என்பதை மேற்குறிப்பிட்ட உதாரணங்களில் இருந்து புரிந்து கொள்வது புரிந்து கொள்வதும் அவசியமானது. ஆகவே இலங்கை டிவியில் எத்தகைய சட்டங்களும் இருக்கலாம் ஆனால் அது நடைமுறையால் நிரூபிக்கப்பட வேண்டும் நடைமுறையால் நிரூபிக்கப்படாத சட்டங்கள் இந்தப் பயனையும் தராது என்பதனையே இலங்கை வரலாறு எமக்கு வெளிக்காட்டின் கிறது.