கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணுக்கு அமைய, ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க வீதம், கடந்த மே மாதத்தில் நிலவிய 5.5% இலிருந்து நடப்பு ஜூன் மாதத்தில் 6.8% ஆக அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி இந்த வ…

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணுக்கு அமைய, ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க வீதம், கடந்த மே மாதத்தில் நிலவிய 5.5% இலிருந்து நடப்பு ஜூன் மாதத்தில் 6.8% ஆக அதிகரித்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.விலை அதிகரிப்புஅதில் மேலும், உணவு மற்றும் உணவு சாரா ஆகிய இரு பிரிவுகளிலுமே விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, மே மாதத்தில் 0.9% என்ற குறைந்த மட்டத்தில் காணப்பட்ட உணவுப் பணவீக்கம், ஜூன் மாதத்தில் 3.6% ஆகக் கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும், மே மாதத்தில் 7.8%ஆக காணப்பட்ட உணவு அல்லாத பணவீக்கம், ஜூன் மாதத்தில் 8.4% ஆக அதிகரிப்பை காட்டியுள்ளது.