பளைப் பாதுகாப்புக் காட்டில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான முகாம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் இருப்பதாகப் போலியான தகவலை வெளியிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட சங்கீத் ஜெயசேகரவை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் பசன் அமரசேகர உத்தரவிட…

பளைப் பாதுகாப்புக் காட்டில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான முகாம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் இருப்பதாகப் போலியான தகவலை வெளியிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட சங்கீத் ஜெயசேகரவை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் பசன் அமரசேகர உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், பளைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அவ்வாறான முகாம் அல்லது வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சந்தேகநபரிடம் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும் பல தேசிய அடையாள அட்டைகள் மற்றும் தொலைபேசி ஆவணங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணை முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் 16ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.