பாணந்துறை – ஹொரணை வீதியில் விபத்து: இருவர் காயம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join பாணந்துறை – ஹொரணை பிரதான வீதியின் குருச சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

பாணந்துறை – ஹொரணை வீதியில் விபத்து: இருவர் காயம்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

பாணந்துறை – ஹொரணை பிரதான வீதியின் குருச சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்டர் ரக லொறி, சொகுசு ஜீப் மற்றும் மற்றுமொரு கார் ஆகிய மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த லொறி ஜீப்பில் மோதியதுடன், பின்னால் வந்த காரிலும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த லொறி சாரதி மற்றும் உதவியாளர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தினால் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.