எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அந்தந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று (29) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், இரண்டு வகையான பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை கு…
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அந்தந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று (29) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், இரண்டு வகையான பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.எரிபொருள் விலை
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றஒன்றின் விலை 20 ரூபாயால் குறைக்கப்பட்டு 414 ரூபாயாகவும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டு 382 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் டீசல் விலைகளும், மண்ணெண்ணெய் விலையும் மாற்றமின்றி அப்படியே பேணப்படும் என கூட்டுத்தாபனம் குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதன் காரணமாக, தம்மால் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

