டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில், மாணவர்கள் பாதுகாப்பு உடைகளை அணிய கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி, மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் சேர்த்து கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு அதிபர்களுக்கு அறிவு…

டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில், மாணவர்கள் பாதுகாப்பு உடைகளை அணிய  கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி,

மாணவர்கள்  பாடசாலை சீருடையுடன் சேர்த்து கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தரநிலைகளுக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட கொசு விரட்டும் (Mosquito Repellent) பொருட்களை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கவும் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு, மாணவர்களை டெங்கு நோயில் இருந்து பாதுகாப்பதற்கும், தொற்று அபாயத்தை குறைப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. R