தனமல்வில காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலுத்வெல பகுதியில், 7 வயது சிறுமி ஒருவருக்குப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர்,விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டி சாரதியான 46 வயதுடைய குறித்த சந்தேகநபர், நீண்டகாலமாகப் பாடசாலை மாணவர்களைப் போக்கு…

தனமல்வில காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலுத்வெல பகுதியில், 7 வயது சிறுமி ஒருவருக்குப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர்,விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதியான 46 வயதுடைய குறித்த சந்தேகநபர், நீண்டகாலமாகப் பாடசாலை மாணவர்களைப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தி வருபவர்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியும் அதே முச்சக்கரவண்டியில் பாடசாலைக்குச் செல்பவர் ஆவார். சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில்  துஷ்பிரயோகம்

கடந்த ஜூன் மாதம் 03-ஆம் திகதி, பாடசாலை முடிந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில், கராஜ் ஒன்றிற்கு   அழைத்துச் சென்று இக்கொடூரச் செயலைச் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்துச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில், கொவுல்ஆர பகுதியைச் சேர்ந்த குறித்த முச்சக்கரவண்டி சாரதியைக் கைது செய்த காவல்துறையினர், அவரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதன்பிறகு, சந்தேகநபரை ஜூலை 16-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி, மருத்துவப் பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தணமல்வில தலைமைப் பொலிஸ் பரிசோதகர் டி.எம்.பி. பண்டார தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.