செய்திகள் 02 December 2025 பல அரச நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்திகள் 02 December 2025 பல அரச நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அ…

செய்திகள்

02 December 2025

பல அரச நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

செய்திகள்

02 December 2025

பல அரச நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர அவர்களின் தலைமையில் 2025.11.21 ஆம் திகதி இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன . அதற்கமைய நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள பின்வரும் நிறுவனங்களின் அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன: 1. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் 2. தேசிய திட்டமிடல் திணைக்களம் 3. அரச தொழில் முயற்சிகள் திணைக்களம் 4. மதிப்பீட்டுத் திணைக்களம் 5. இலங்கை சுங்கம் 6. வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் 7. அபிவிருத்தி நிதித் திணைக்களம் 8. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 9. அரச நிதிசார் கொள்கைத் திணைக்களம் 10. அரச நிதித் திணைக்களம் இந்தத் திணைக்களங்களின் பணிகள், எதிர்காலத் திட்டங்கள், தேவைகள் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுண ஆரச்சி மற்றும் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.