யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட, மற்றும் சுவீகரிக்க அடையாளம்காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கடும் குழப்பத்துடன் முடிவடைந்துள்ளது. விமான நிலையத்திற்காக காணி சுவீகரிக்கப்பட்ட மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணிஉரிமையாளர்களுக்கு க…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட, மற்றும் சுவீகரிக்க அடையாளம்காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கடும் குழப்பத்துடன் முடிவடைந்துள்ளது.

விமான நிலையத்திற்காக காணி சுவீகரிக்கப்பட்ட மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணிஉரிமையாளர்களுக்கு காணிகளுக்கான இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல்தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில், நடைபெற்றது.

பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலர் ம,பிரதீபனும் கலந்துகொண்டிருந்தார்

இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கு சத்திய கடதாசியில் கையொப்பம் இட வேண்டும் என கோரியதைஅடுத்து, சத்திய கடதாசியில் இழப்பீட்டு தொகையோ, காணியின் விபரமோ, எதுவும் இல்லாமல், சத்தியகடதாசி தெளிவற்று காணப்படுவதால், சத்திய கடதாசியில் கையெழுத்து வைக்க முடியாது என காணிஉரிமையாளர்கள் தெரிவித்தனர்

அதனை அடுத்து அதிகாரிகளுக்கும், காணி உரிமையாளர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டதைஅடுத்து, மண்டபத்திற்குள் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்

அதனை அடுத்த பெருமளவான காணி உரிமையாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.