பலாங்கொடையில் தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 17 வயதுடைய மூன்று மாணவிகளும் திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை – பின்னவல, எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவிகள்,…

பலாங்கொடையில் தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 17 வயதுடைய மூன்று மாணவிகளும் திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை – பின்னவல, எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவிகள், நேற்று (31) தனியார் வகுப்பிற்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட மூவரும் பலாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவிகள் மூவரும் திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.