கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்காக தோட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ரொப்கில் தோட்டத்திற்கு நுழைவாயில் பகுதியில் குறித்த பலகை ஆலையை அமைப்பதற்கான அடித்தளத…
கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்காக தோட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ரொப்கில் தோட்டத்திற்கு நுழைவாயில் பகுதியில் குறித்த பலகை ஆலையை அமைப்பதற்கான அடித்தளத்தை நிர்மாணிக்கும் நோக்கில், அப்பகுதியில் காணப்பட்ட தேயிலைச் செடிகளை அகற்றும் நடவடிக்கையை தோட்ட நிர்வாகம் இன்று(01.09.2026) முன்னெடுக்க முற்பட்டுள்ளது. வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு இதன்போது, அப்பகுதியில் ஒன்றுகூடிய தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆலையை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சீரற்ற காலநிலையின்போது ரொப்கில் தோட்டப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தொழிலாளர்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் பாதிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின்போதும் கொட்டகலையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரொப்கில் பகுதியும் ஒன்றாக இருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக காணிகளை வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தபோது, தேயிலைச் செடிகளை அகற்ற முடியாது என்றும், உரிய அறிக்கை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.தேயிலைச் செடிகளை அகற்றஎனினும், தற்போது பலகை ஆலையை அமைப்பதற்காக தேயிலைச் செடிகளை அகற்ற முடிவது எவ்வாறு என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தாங்கள் வியாபார நடவடிக்கைகளுக்காக காணிகளை கோரவில்லை என்றும், தங்களது குடும்பங்களுடன் வாழ்வதற்காகவே காணிகளை கோருவதாகவும் தெரிவித்துள்ள தொழிலாளர்கள், இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, பலகை ஆலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதியில் இந்து ஆலயம் ஒன்றும் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தங்களது வழிபாட்டு நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என கவலை வெளியிட்டுள்ள மக்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுத்த பின்னர், பொருத்தமான இடத்தில் ஆலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

