காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாகப் பரந்துள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'மஞ்சள்' எச்சரிக்கையை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின்படி, காங்கேசன்துறைய…
காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாகப் பரந்துள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'மஞ்சள்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின்படி, காங்கேசன்துறையிலிருந்து பொத்துவில் வரை மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில், மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக காணப்படும்.கடல் அலைகளின் உயரம்
இதற்கிடையில், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 3.0 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
அதன்படி, கடற்படை மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவோர் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளைக் கூர்ந்து கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

