பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு சென்ற போதிலும், இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது. தற்போதைய…

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு சென்ற போதிலும், இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலை தொடருமானால், நாட்டின் பல்கலைக்கழகக் கட்டமைப்பு முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கப்படாவிட்டால், முதற்கட்ட தொழிற்சங்க நடவடிக்கையாக நாளை நண்பகல் உணவு இடைவேளையில் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முன்பாக போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக FUTA தெரிவித்துள்ளது.

இதன் பின்னரும் உரிய தீர்வுகள் வழங்கப்படாத பட்சத்தில், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், அதன் தாக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட முழு மாணவர் சமூகத்தையும் பாதிக்கும் எனவும் FUTA வலியுறுத்தியுள்ளது.