பமுனுகம கடலில் நீந்தச் சென்ற ஜா-எல, நிவந்தம பகுதியைச் சேர்ந்த ஒரு தாயும் மூன்று குழந்தைகளும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில், அவர்களில் மூவரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (30) மாலை சுமார் 5:30 மணியளவில் பமுனுகம கடலில் நீந்த…

பமுனுகம கடலில் நீந்தச் சென்ற ஜா-எல, நிவந்தம பகுதியைச் சேர்ந்த ஒரு தாயும் மூன்று குழந்தைகளும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில், அவர்களில் மூவரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (30) மாலை சுமார் 5:30 மணியளவில் பமுனுகம கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது, அந்தக் குழுவினர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாலிஷா பெர்னாண்டோ தாய்(வயது35) , வினுதி தஹம்சா (வயது 4) – மகள்  சதீஷ் அனுஹாஸ் (வயது 13) விஸ்வ பிரசாதி (11 வயது) ஆகியோரை காணாமல் போனவர்களாவர்.

இதுவரை மாலிஷா பெர்னாண்டோ, வினுதி தஹம்சா மற்றும் விஸ்வ பிரசாதி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; எனினும், சதீஷ் அனுஹாஸ் (13) இன்னும் மீட்கப்படவில்லை.

சதீஷ் அனுஹாஸைக் கண்டுபிடிப்பதற்காகப் போபிட்டிய காவல் நிலைய அதிகாரிகளும் கடற்படை அதிகாரிகளும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.