இமயமலைப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் பேரழிவுமிக்க வெள்ள அபாயங்கள் மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா எச்சரித்துள்ளார்.நேபாளத்தில் கடந்த வாரம் பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிர…

இமயமலைப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் பேரழிவுமிக்க வெள்ள அபாயங்கள் மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா எச்சரித்துள்ளார்.நேபாளத்தில் கடந்த வாரம் பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐக் கடந்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.​இயற்கை அனர்த்தங்களை தடுத்தல்

காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், நேபாளம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஆபத்தான நிலையிலுள்ள பனிப்பாறை ஏரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதுடன், ஆற்றோரப் பகுதிகளில் வாழும் மில்லியன் கணக்கிலான மக்கள் இதனால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

​இந்த அனர்த்தங்கள் நீர்மின் உற்பத்தித் திட்டங்களை அச்சுறுத்துவதுடன், ஆறுகளின் கரையோரப் பகுதிகளை மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மாற்றக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறிப்பாக, நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நிர்மாணப்பணியில் இருந்த 15 பிரதான நீர்மின் நிலையங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

​இயற்கை அனர்த்தங்களைத் தடுக்கும் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும் மீறி இத்தகைய பேரழிவுகள் நிகழும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதனால், பாதிக்கப்பட்ட பிராந்திய மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயர்வது தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.