எதிர்காலச் சீரற்ற காலநிலை நிலைமைகளால் வரவிருக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பவற்றுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்கான அவசரத் தயாரிப்பு நடவடிக்கைகளை இடர்முகாமைத்துவ நிலையம் (DMC) முடுக்கிவிட்டுள்ளது. Xகஸ்ட் 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகள…
எதிர்காலச் சீரற்ற காலநிலை நிலைமைகளால் வரவிருக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பவற்றுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்கான அவசரத் தயாரிப்பு நடவடிக்கைகளை இடர்முகாமைத்துவ நிலையம் (DMC) முடுக்கிவிட்டுள்ளது.
Xகஸ்ட் 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் பரீட்சை நடவடிக்கைகளில் காலநிலை தொடர்பான தாக்கங்களைக் கண்காணிப்பதற்காக, தனது செயற்பாட்டு அறையில் விசேட ஒருங்கிணைப்புப் பிரிவு ஒன்று அமைக்கப்படும் என இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம், இடர்முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கிடையில் புதன்கிழமை (05) அன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் பரீட்சை அதிகாரிகளுக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்காக இடர் மீட்புக் குழுக்களும் படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பரீட்சை நிலையங்களை அடைய முடியாத மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையின்போதும் இடர்முகாமைத்துவ நிலையம் படகுகளைப் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதியும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.












