அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சீனா தனது எதிர்ப்புத் தடை சட்டங்களை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சீனா கொண்டுவந்துள்ள இரு புதிய ச…

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சீனா தனது எதிர்ப்புத் தடை சட்டங்களை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது.

நடப்பு ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சீனா கொண்டுவந்துள்ள இரு புதிய சட்டங்கள் மூலமாக, தங்களின் விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பெய்ஜிங் அரசுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், சீனாவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கும் மூன்றாவது சட்ட வரைவும் தற்போது தயாராகி வருகிறது.விசா இரத்து சீனாவின் இந்த அதிரடி மாற்றங்களால் அங்கு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளன. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட முயன்றால், அது சீனாவின் புதிய விதிகளின்படி "சீனாவிற்கு எதிரான பாகுபாடு" எனக் கருதப்பட்டு அபராதம், சொத்து முடக்கம், முதலீட்டுக் கட்டுப்பாடுகள் மற்றும் விசா இரத்து போன்ற கடுமையான தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே சீனாவின் மேம்பட்ட தொழில்நுட்பத் துறை மற்றும் மனித உரிமை மீறல் முறைப்பாடுகள் மீது தடைகளை விதித்துள்ள நிலையில், சீனா தற்போது மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாகப் பழிக்குப்பழி வாங்கும் உத்தியைக் கையில் எடுத்துள்ளது.

இதனால், சர்வதேச நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான வர்த்தகப் போரில் மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றன.