பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று திங்கட்கிழமை முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டண திருத்தத்தின்படி,…

பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று திங்கட்கிழமை முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது.

இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணையாக சொகுசு பேருந்து கட்டணங்களும் அதிவேக வீதிகளுக்கான பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நடைமுறைக்கு வரும் புதிய பேருந்து கட்டண திருத்தம் குறித்து பேருந்து ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்தி, பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான சோதனைகள் இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களைப் புதுப்பிப்பதற்கு இன்னும் 2 நாட்கள் வரை ஆகலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.