மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கேற்ப பேருந்து கட்டணங்களும் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.எரிபொருள் வில…
மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கேற்ப பேருந்து கட்டணங்களும் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.எரிபொருள் விலை மாற்றம் எரிபொருள் விலை மாற்றங்களுக்கு அமைவாக போக்குவரத்து துறையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.இந்நிலையில் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, 05ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.
இதற்கமைய, சாதாரண சேவைகளுக்கான குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதிகபட்ச பேருந்து கட்டணம் 2,422 ரூபாவில் இருந்து 2,902 ரூபாவரை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

