“Account Temporarily Unavailable” என்ற அறிவிப்புடன் ,முகப்புத்தக கணக்குகளை அணுக முடியாத பிரச்சினையை இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பல பயனர்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலை காரணமாக, சிலரால் தங்களது கணக்குகளில் உள்நுழையவோ அல்லது வழக்கமான சேவைகளைப் பயன்படுத்தவோ முடியாமல் இருப்பதாக…

“Account Temporarily Unavailable” என்ற அறிவிப்புடன் ,முகப்புத்தக கணக்குகளை அணுக முடியாத பிரச்சினையை இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பல பயனர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இந்த நிலை காரணமாக, சிலரால் தங்களது கணக்குகளில் உள்நுழையவோ அல்லது வழக்கமான சேவைகளைப் பயன்படுத்தவோ முடியாமல் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

எனினும், இந்த பிரச்சினைக்கான காரணம் தொடர்பில் மெட்டா இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தற்காலிக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், பயனர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்கவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.