பேச்சுரிமையைப் பாதுகாப்பதாகக் கூறி பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அதற்கு மாறாக மக்களின் பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றங்களின் தொடர் தீர்ப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றது முதல்,…

பேச்சுரிமையைப் பாதுகாப்பதாகக் கூறி பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அதற்கு மாறாக மக்களின் பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றங்களின் தொடர் தீர்ப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.

ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றது முதல், முதலாம் அரசியலமைப்புத் திருத்த உரிமைகளான பேச்சுரிமை, மத சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை அவரது நிர்வாகம் மீறியதாக 75 கூட்டாட்சி நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.வழக்குகளின் தீர்ப்புகள்

பலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள், பல்கலைக்கழகங்களுக்கான நிதியுதவி இரத்து, சட்ட நிறுவனங்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மீதான கெடுபிடிகள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளிலேயே இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இதில் பெரும்பாலான தீர்ப்புகள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிகளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் வழங்கப்பட்டவை என்றாலும், குடியரசுக் கட்சியினரால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளும் 10 வழக்குகளில் ட்ரம்ப் அரசுக்கு எதிராகவே தீர்ப்பளித்துள்ளனர்.

எனினும், நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்புகளை "அரசியல் செயல்பாடுடையவை" என விமர்சித்துள்ள வெள்ளை மாளிகை, தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்துவருகிறது.