பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்பு! இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, 434 ரூபாவிலிருந்து 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு…

பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்பு!

இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, 434 ரூபாவிலிருந்து 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, 407 ரூபாவிலிருந்து 382 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.