இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு இணங்க, தாமும் விலைகளைக் குறைக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் அறிவித்துள்ளது.முன்னதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளைக் திருத்தியமைத்து…
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு இணங்க, தாமும் விலைகளைக் குறைக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் அறிவித்துள்ளது.முன்னதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளைக் திருத்தியமைத்துள்ளது.அதற்கமைய, ஒரு லீற்றர் ஒக்டென் 92 பெட்ரோலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 399 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டென் 95 பெட்ரோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

