இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (13) அதிகாலை கலாவெ பகுதியிலிருந்து இப்பலோகம நோக்கி இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அரு…

இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (13) அதிகாலை கலாவெ பகுதியிலிருந்து இப்பலோகம நோக்கி இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.மேலதிக விசாரணை

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதுடைய பாடசாலை ஆசிரியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இப்பலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.