வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பெருமளவு போதைப்பொருள்களைக் கடத்த முயன்ற 36 வயதுடைய பெண் ஒருவர், நேற்று முன்தினம்(11.07.2026) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே, இ…
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பெருமளவு போதைப்பொருள்களைக் கடத்த முயன்ற 36 வயதுடைய பெண் ஒருவர், நேற்று முன்தினம்(11.07.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே, இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.போதைப்பொருளுடன் கைதானப் பெண் மேற்படி சந்தேகநபர் மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 1 கிலோகிராம் 140 கிராம் ஐஸ் போதைப்பொருள், 538 கிராம் ஹெரோயின் என்பவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

