பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன் தேர்வு நிகழ்ச்சியின் தொடக்கமே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது நைட்டி அணிந்து வந்து நடுவரால் 'ரெட் கார்டு' கொடுத்து வெளியேற்றப்பட்ட பெண் போட்டியாளர் பிரிய வர்ஷினி விஜய் டிவி மற்றும் நடுவர் ஆரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக…
பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன் தேர்வு நிகழ்ச்சியின் தொடக்கமே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது நைட்டி அணிந்து வந்து நடுவரால் 'ரெட் கார்டு' கொடுத்து வெளியேற்றப்பட்ட பெண் போட்டியாளர் பிரிய வர்ஷினி விஜய் டிவி மற்றும் நடுவர் ஆரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். காமன் மேன் நிகழ்ச்சிக்காக விண்ணப்பித்த ஏராளமானோரை எமினேட் செய்துவிட்டு 50 பேரை மட்டும் தேர்வு செய்தார்கள் அதிலும் 30 பேரை எலிமினேட் செய்துவிட்டார்கள்.TRPக்காக அசிங்கபடுத்துவீங்களா?
இவர்களுக்கு 'காமன்மேன்' என்ற பெயர் மட்டும் தான் வேண்டும், ஆனால், ஷோக்கு காமன் மேன் தேவையில்லை.
நான் இன்ஸ்டாகிராமில் நைட்டியை நார்மல் செய்யுங்க என வீடியோ போடுபவள். பிக் பாஸ் ஆடிஷனுக்கு செல்லும் முன், வீட்டின் சாதாரண பெண்ணாக நைட்டியில் வரலாமா என அவர்களிடம் கேட்டு, அவர்கள் சரி என சொல்லியதால் தான் தான் நைட்டியில் சென்றேன்.
இவர்களே என்னை நைட்டியில் வரச் சொல்லிவிட்டு, நிகழ்ச்சியில் அத்தனை பேருக்கும் முன்னால் பிரச்சனை பண்ணவே நைட்டியில் வந்தீங்களா? என கேட்டு என்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார்கள்.
டிஆர்பி ரேட்டிங்கிற்காக எது வேண்டுமானாலும் செய்வார்களா? நடுவராக இருந்த ஆரி என்னை பார்த்து, குழந்தையா பிறக்கும் போது ஆடை இல்லாமல் தான் இருப்போம், அதற்காக வளர்ந்த பிறகும் அப்படியே இருக்க முடியுமா? எனக் கேட்கிறார்.
ஆரி, ஓவியா, மாயாவுக்கும் இடையே நடந்த விஷயங்களை அரை மணி நேரமானாலும் அப்படியே டெலிகாஸ்ட் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு உங்களுக்கு தேவையானதை மட்டும் கட் பண்ணி என்னை ஒரு கெட்டவள் போலச் சித்தரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆவேசமாக பேசி உள்ளார்.












