பிக்பாஸ் தமிழ் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மைல்கல் சீசனான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புதிய லாஞ்ச் புரோமோவை வெளியிட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிக்பாஸ் தமிழ் சீசன் 10 ‘கார்னிவிழா’, பிக்பாஸ் ர…
பிக்பாஸ் தமிழ் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மைல்கல் சீசனான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புதிய லாஞ்ச் புரோமோவை வெளியிட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 ‘கார்னிவிழா’, பிக்பாஸ் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்த 'பிக் பாஸ் - காமன் மேன்' நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. நடுவர்களாக முன்னாள் போட்டியாளர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியை முன்னாள் போட்டியாளர் மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
அதோடு, ஓவியா, ராஜு, ஆரி போன்ற முன்னாள் போட்டியாளர்கள் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.
இந்த லாஞ்ச் புரோமோ மூலம் ரசிகர்களை விஜய் சேதுபதி வரவேற்கிறார்.பிக் பாஸ் Common Man, 100 நாட்கள் இடைவிடாத பொழுதுபோக்குடன், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான சீசனாக அமையவுள்ளது.
இந்த பிரம்மாண்ட கொண்டாட்டம் விரைவில், ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக தொடங்கவுள்ளது.
பிக்பாஸ் தமிழ் இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், பிக் பாஸ் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












