பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு உத்தமர் கிடையாது. பொய்களைக் கூறுவதில் அவர் கைதேர்ந்தவர் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், பிள்ளையான் என அழைக்கப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்…

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு உத்தமர் கிடையாது. பொய்களைக் கூறுவதில் அவர் கைதேர்ந்தவர் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

பிள்ளையான் என அழைக்கப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஒரு உத்தமர் கிடையாது. அவர் தொடர்பாக மக்களே நன்கு அறிந்திருக்கிறார்கள். பொய்களைக் கூறுவது தொடர்பாக அவர்தான் இதிலே ஒரு கைதேர்ந்தவர். அண்மைய தினங்களிலே அவர் தொடர்பான ஒரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மைய தினம் மட்டக்களப்பிலே அந்த விசாரணை ஒன்றிற்காக, கொலை செய்த குற்றத்திற்காக அவர் விசாரிக்கக் கொண்டுவரப்பட்டிருந்த இந்த நேரத்திலே, எங்களது அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் மீது அவர் ஒரு கேலிக்கையான, ஒரு வேடிக்கையாக அதனைப் பேசியிருந்தார். அவரது செயல்பாடுகள் எப்படிப்பட்டது என மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். நாங்கள் சரியான முறையிலே எங்களது விசாரணைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றோம்.

நேர்மையாகவும் நீதியாகவும் அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே, நாங்கள் எந்த ஒரு பொய்க் குற்றச்சாட்டுகளோ அல்லது அரசியல் அழுத்தங்களோ அல்லது அரசியல் பழிவாங்கலோ நாங்கள் மேற்கொள்ளவில்லை. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாகத்தான் நாங்கள் விசாரணைகளை மேற்கொள்கின்றோம். நீதித்துறையும், காவல்துறையும் நியாயமாகவும் நீதியாகவும் அந்த விசாரணைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது என்றார்.