முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு தேசியக் கொடியை அணிவிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிள்ளையான் மீது முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளின் பின்னணியில், இந்தப் புகைப்படம் பெரும் ச…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு தேசியக் கொடியை அணிவிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிள்ளையான் மீது முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளின் பின்னணியில், இந்தப் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இது தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.தேசியக் கொடிஎனினும், இது குறித்து விமல் வீரவன்சவிடம் வினவியபோது, குறித்த புகைப்படம் கடந்த போர் காலப்பகுதியில் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரால் கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதன் பின்னர், மானெல் மல் என்ற இயக்கத்தினால் நடத்தப்பட்ட தேசியக் கொடி அணிவிக்கும் நிகழ்வின் போது எடுக்கப்பட்டது என அவர் விளக்கமளித்துள்ளார்.

