பிள்ளையானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ‘பிள்ளையான்’ என அழைக்கப்ப…

பிள்ளையானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இணையவழி தொழிநுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.