இலங்கையின் பிரபல மூத்த பாடகி மரியசெல் குணதிலக்க தனது 68 ஆவது வயதில் காலமானார். குடும்ப வட்டாரங்களின் தகவல்களின்படி இந்த அறிவிப்பு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை காலமானதாக குடும்ப வட்ட…
இலங்கையின் பிரபல மூத்த பாடகி மரியசெல் குணதிலக்க தனது 68 ஆவது வயதில் காலமானார். குடும்ப வட்டாரங்களின் தகவல்களின்படி இந்த அறிவிப்பு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய தாக்கத்துடன்கூடிய, வேகமான தாளத்தைக் கொண்ட இசைப் பாணிக்கு பெயர் பெற்ற மரியசெல் குணதிலக்க, இலங்கை இசைத்துறைக்கு மிகமுக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.அவரால் பாடப்பட்ட "கண்டி லமிஸ்ஸி" உட்பட பல பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. தனது நீண்டகால கலைப்பயணம் முழுவதும் அவர் உள்ளூர் இசைத்துறையில் மிகவும் மதிக்கப்படும் ஒரு சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தார் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. அன்னாரது இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

