சில கோரிக்கைகளை முன்வைத்து நீர்கொழும்பு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று நண்பகல் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீர்கொழும்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவ…

சில கோரிக்கைகளை முன்வைத்து நீர்கொழும்பு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று நண்பகல் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்மொழியப்பட்ட பொருளாதார அபிவிருத்தி சேவைச் சேவைப்பிரமாணக் குறிப்பை (Constitution) உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முக்கியமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை செயலாளர் தம்மிக்க முனசிங்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

ஒரு மணித்தியாலம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, மத்திய மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நாடு தழுவிய ரீதியில் இன்று ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.இஸட்.ஷாஜஹான்