பிரித்தானியாவில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி சூழல் நீடித்தால், நாட்டில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாம் பிராட்ஷா எச்சரித்துள்ளார். இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வேல்ஸ் முழுவதிலும் வற…

பிரித்தானியாவில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி சூழல் நீடித்தால், நாட்டில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாம் பிராட்ஷா எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வேல்ஸ் முழுவதிலும் வறட்சி நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2 கோடிக்கும் அதிகமான மக்களுக்குக் குடிநீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கோதுமை மற்றும் ஓட்ஸ் விளைச்சல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புல் வளராததால் கால்நடை வளர்ப்போர் குளிர்காலத்திற்கான தீவனங்களை இப்போதே பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் பிராட்ஷா தெரிவித்துள்ளார்.நிதியுதவி மேலும், காய்கறி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததால், உள்நாட்டு உணவு உற்பத்தி குறைந்து, விளைச்சல் செலவும் அதிகரித்துள்ளது. நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு நீர் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால், மழைநீரைச் சேமிக்க புதிய நீர்த்தேக்கங்களைக் கட்ட அரசு நிதியுதவியும் வரிவிலக்குகளும் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.தீவிர வெப்ப அலை

இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதத்தில் வெறும் 8 சதவீத மழையே பெய்துள்ளது. இது 1911-ஆம் ஆண்டில் பதிவான குறைந்தபட்ச மழைப்பொழிவு சாதனையை விடவும் மிகக் குறைவானதாகும். பிரித்தானியா மட்டுமன்றி இத்தாலி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் தீவிர வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், உணவுப் பொருட்கள் விநியோகமும் பெரும் சவாலாக மாறியுள்ளது.