நீதித்துறை விவகாரத்தில் மூத்த வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்றே தீர்மானம் எடுத்ததாகக் கூறும் ஜனாதிபதி, அந்த வல்லுநர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்…
நீதித்துறை விவகாரத்தில் மூத்த வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்றே தீர்மானம் எடுத்ததாகக் கூறும் ஜனாதிபதி, அந்த வல்லுநர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், "உள்நாட்டுச் சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள் மற்றும் கொமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தும் அரசாங்கம் இந்த தீர்மானத்தில் பிடிவாதமாக இருக்கின்றது. காணாமல் போன நிதி.. நீதித்துறை வெற்றிடங்களை அல்லது பிரச்சினைகளை, அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதாலோ அல்லது ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாலோ ஒருபோதும் தீர்த்துவிட முடியாது. அத்துடன், சுங்கத்தில் கொள்கலன்கள் காணாமல் போனமை மற்றும் நிதி அமைச்சராக உள்ள ஜனாதிபதியின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊடுருவல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை.அது மாத்திரமன்றி, மகாநாயக்க தேரர்கள் எழுப்பிய கேள்விகளுக்குக் கூட ஜனாதிபதி இன்னும் உரிய பதிலளிக்கவில்லை. அரசாங்கம் தனது சுய தேவைகளுக்காகவும் அரசியல் நிலைப்புத்தன்மைக்காகவும் நாட்டின் நீதித்துறை அமைப்பையும் மக்களையும் காட்டிக்கொடுத்து வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.












