முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 330,000 ரூபா அரச பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாது அவர் ம…

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 330,000 ரூபா அரச பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாது அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளன.

சுமார் 3,000 விசா அட்டைகளை அச்சிடுவதற்கு அதிகார சபையின் நிதியிலிருந்து 1,285,200 ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை.

அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து விஹெனாபாம் நிறுவனத்திற்கு 360,000 ரூபாவையும், சிலாவ் என்எஸ்பி (NSP) கணக்கிற்கு 494,000 ரூபாவையும் அரச நிதியிலிருந்து செலுத்தச் செய்தமை.

தனது தனிப்பட்ட செயலாளரை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையில் (Civil Aviation Authority) சட்டவிரோதமாக நியமித்து, அவருக்கு அரச நிதியிலிருந்து சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்கியமை.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமானக் கொள்முதல் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கபில சந்திரசேன அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த டீலிங்கின் மூலம் கிடைத்த பணத்தில் 20 மில்லியன் ரூபா பியங்கர ஜயரத்னவுக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வாகனப் பயன்பாட்டில் விதிகளை மீறி, விசாரணை அறிக்கையின்படி 2,737,599 ரூபாவிற்கும் அதிகமான தொகையைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகச் செலவழித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய காலப்பகுதியில் நிகழ்ந்தவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தவிடயங்கள் தொடர்பான முழுயைான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..