இலங்கைப் பொலிஸ் திணைக்களத்துக்கு மிக விரைவில் நூறு சப்இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில் அவர்களுக்கான பயிற்சிகள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சப் இன்ஸ்பெக்டர்களைத் தெரிவு செய்வதற்கான ஆரம்ப நடைமுறையின்போது 19 பேருக்கு 19 பேருக்கு சட்டவ…

இலங்கைப் பொலிஸ் திணைக்களத்துக்கு மிக விரைவில் நூறு சப்இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில் அவர்களுக்கான பயிற்சிகள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சப் இன்ஸ்பெக்டர்களைத் தெரிவு செய்வதற்கான ஆரம்ப நடைமுறையின்போது 19 பேருக்கு 19 பேருக்கு சட்டவிரோதமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகள் கடந்த 2024இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் 19 பேர் அவ்வாறு சட்டவிரோதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், மறு தேர்வு முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தற்போது பயிற்சியை நிறைவுசெய்யும் கட்டத்தில் உள்ளனர்..

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளில் அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.