பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து, மோசமாக நடந்துகொண்ட ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று(30.06.2026) வேயாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 5 இளைஞர்கள் கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (29) நண்ப…

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து, மோசமாக நடந்துகொண்ட ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(30.06.2026) வேயாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

5 இளைஞர்கள் கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று (29) நண்பகல் வேயாங்கொடை அருகே பொசன் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 'மிஹிந்து பெரஹரா' ஊர்வலம் நிமித்தமாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது, கெப் ரக வாகனமொன்றில் வந்த ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளன.

இதனையடுத்து, இன்று(30) குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நிட்டம்புவ மற்றும் யக்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வேயாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.