புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரல்! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 2026 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்…

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரல்!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

2026 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படும் பணி இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, விண்ணப்பங்களை எதிர்வரும் மாதம் 08 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளம் ஊடாக ஒன்லைன் முறையில் சமர்ப்பிக்க முடியும்.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் படி, இரண்டாம் வினாத்தாள் அன்று முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதலாம் வினாத்தாள் முற்பகல் 11.15 மணி முதல் 12.15 மணி வரையிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.