அவுஸ்திரேலியா மற்றும் பரகுவே அகிய அணிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இந்த முடிவின் மூலம் அவுஸ்திரேலியா உலகக் கோப்பை நொக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ள பராகுவே அணியும் அடுத்த சுற்றுக…

அவுஸ்திரேலியா மற்றும் பரகுவே அகிய அணிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இந்த முடிவின் மூலம் அவுஸ்திரேலியா உலகக் கோப்பை நொக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ள பராகுவே அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த விரிவுபடுத்தப்பட்ட தொடரில், குழு நிலையில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் 12 அணிகளில் 8 சிறந்த அணிகள் நொக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும். இதன்காரணமாகவே, தலா மூன்று புள்ளிகளுடன் இருந்த அவுஸ்திரேலியா மற்றும் பராகுவே அணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடின. அமெரிக்கா குழுவில் முதலிடத்தைப் பிடித்தது. அவுஸ்திரேலியா மற்றும் பராகுவே ஆகிய இரு அணிகளுமே தலா நான்கு புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடித்து நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. சமநிலை பெறுபேறின் மூலம் நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ள பராகுவே, எஞ்சியிருக்கும் போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்து நொக் -அவுட் சுற்றுக்கு முன்னேற உறுதியாக உள்ளது. அவுஸ்திரேலியா உலகக் கோப்பையில் நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவது இது மூன்றாவது முறையாகும் கடந்த 2006 ஆம் மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தங்களது அணியின் பெயரை நொக் அவுட் சுற்றில் பதிவு செய்திருந்தன. அவுஸ்திரேலியா தனது அடுத்த போட்டியை எதிர்வரும் ஜூலை 3-ம் திகதி டெக்சாஸின் ஆர்லிங்டனில் விளையாடுகிறது. இதில் அவர்கள் குழு G-ல் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணியை எதிர்கொள்வார்கள். அந்த அணியின் விவரம் இன்று வெள்ளிக்கிழமை இரவு தெரியவரும்