புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கான நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அரசின் முக்கிய பதவிகளுக்கு முஸ்லிம்கள் தொடர…
புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கான நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அரசின் முக்கிய பதவிகளுக்கு முஸ்லிம்கள் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அரசமைப்புப் பேரவையினால் தெரிவுமேலும் தெரிவிக்கையில், "புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கான மூன்று உறுப்பினர்கள் அரசமைப்புப் பேரவையினால் கடந்த 24 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டு பெயரிடப்பட்டுள்ளனர். எனினும், இதில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் சமன்சிறி ரத்நாயக்க, எம்.பி. ரோஹன புஷ்பகுமார மற்றும் கே. தவலிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவில் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இருவரும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தமிழரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த யாரும் இதில் உள்வாங்கப்படவில்லை.
சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூன்று பிரதான இனங்கள் வாழும் இந்நாட்டில், இத்தகைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்குச் சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஓர் உறுப்பினரை நியமித்திருக்க வேண்டும். அதுவே முறையானதாகும்.குறிப்பாக, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின் போது எல்லை நிர்ணயம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. செயலாளர்கள் நியமனத்தின் போதும்சில பிரதேச எல்லைகளில் இருந்து பல உறுப்பினர்கள் தெரிவாகும் நிலை காணப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களில், தான் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதித்துவம் தொடர்பில் எடுத்துரைப்பதற்கு அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆணைக்குழுவில் இருப்பது கட்டாயமாகும். எனவே, எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள இந்தக் குறையை அரசு உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
அத்துடன், தற்போதைய அரசில் முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களின் போதும் முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். அரசின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் நியமிக்கப்படவில்லை. இது தொடர்பில் பலரும் சுட்டிக்காட்டிய போதிலும், அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை. இதேபோன்று, அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தின் போதும் முஸ்லிம்கள் யாரும் ஆரம்பத்தில் நியமிக்கப்படவில்லை. பின்னர் அது குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த பின்னரே, முஸ்லிம் ஒருவர் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்துக்கான அனைத்து உரிமைகளையும் தற்போதைய அரசிடம் போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எந்தவொரு அரசிலும் முஸ்லிம்கள் இவ்வாறாகப் புறக்கணிக்கப்பட்டதில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.












