கொழும்பு, பொரளை புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்று (6) இரவு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இந்த கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்…

கொழும்பு, பொரளை புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்று (6) இரவு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இந்த கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பொரளை புதிய மகசின் சிறைச்சாலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், 9 கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக தற்போது பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நேற்று  ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.