புதிய பாடசாலை தவணைக்கு முன்னர் நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
Reported by NewsFirst (Tamil)
Colombo (News 1st) புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. தென்மேற்கு பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை…
Colombo (News 1st) புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. தென்மேற்கு பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக மீண்டும் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தமது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 95,174 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 72 டெங்கு மரணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மாதத்தின் கடந்த 30 நாட்களில் 9,838 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
About this report
This page covers புதிய பாடசாலை தவணைக்கு முன்னர் நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் and is filed in the Local section of KottuRoti. It was first recorded on 31 August 2026. The report currently draws on one source article. KottuRotipreserves the original reporting language and identifies the outlet behind each account so readers can distinguish source material from the aggregated story.
Follow the source links below to inspect the publisher's original wording, context and later corrections. This page may be refreshed when the underlying story develops or another outlet publishes relevant coverage; its publication and update times help readers identify those changes. For broader context, browse the latest news in this language, the breaking news feed, or the chronological Sri Lanka news archive.
The lead report on this page comes from NewsFirst (Tamil) and is presented in Tamil. KottuRoti classifies it under Local and keeps the source attribution visible rather than presenting aggregated material as independent eyewitness reporting. When more coverage becomes available, the source list and story record can expand while this canonical page remains stable for readers and search engines.