தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகஹகந்த வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புத்தல பொலிஸ் விசேட…

தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகஹகந்த வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வனப்பகுதியில் பல்வேறு உயரங்களில் வளர்க்கப்பட்டிருந்த ஏராளமான கஞ்சா செடிகள் அடங்கிய தோட்டம் ஒன்று அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளின் மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் கைப்பற்றப்பட்ட அனைத்து கஞ்சா செடிகளும் தீயிட்டு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தோட்டத்தை பராமரித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.