Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டானை சென்றடைந்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகஸ்ட் 31ஆம் திகதி பிற்பகல் பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். விமான நிலையத்…

Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டானை சென்றடைந்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகஸ்ட் 31ஆம் திகதி பிற்பகல் பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தில் வரவேற்புஅவரை பூட்டான் பிரதமர் டஷோ ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.

பூட்டானில் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறும் முதலாவது ‘Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் உணவு முறைமை தொடர்பான நிபுணர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.