தெற்காசியாவிலேயே சிறந்த இணையக் கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்வதால், இங்கிருந்து கொண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளின் வங்கிக் கணக்குகளைத் ஹெக் செய்வதும், உலகெங்கிலும் உள்ள மக்களை ஏமாற்றுவதும் இவர்களுக்கு எளிதாகிறது. சுற்றுலாப் பயணிகள் குழுவாக வந்து தங்குவது…

தெற்காசியாவிலேயே சிறந்த இணையக் கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்வதால், இங்கிருந்து கொண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளின் வங்கிக் கணக்குகளைத் ஹெக் செய்வதும், உலகெங்கிலும் உள்ள மக்களை ஏமாற்றுவதும் இவர்களுக்கு எளிதாகிறது. சுற்றுலாப் பயணிகள் குழுவாக வந்து தங்குவது இலங்கையர்களுக்குப் பழகிப்போன ஒன்று என்பதால், இவர்கள் சொகுசு வீடுகளையும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் எளிதாக வாடகைக்கு எடுத்து, மிகச் சாதாரணமாக உள்ளூர் சமூகத்திற்குள் கலந்து விடுகின்றனர். மேலும், இலங்கையில் நீண்டகாலமாக புழக்கத்தில் உள்ள 'உண்டியல்' போன்ற வங்கி சாரா பாரம்பரிய முறைசாரா பணப் பரிமாற்ற முறைகள், இக்குற்றவாளிகள் தங்களின் கறுப்புப் பணத்தை எவ்வித தடயமும் இன்றி சர்வதேச அளவில் கடத்த ஏதுவாக அமைந்துள்ளன.