90-களின் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த முன்னணி நாயகியான சிம்ரன், முதன்முறையாகச் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பேட்ட' திரைப்படத்தில் இணைந்து நடித்து மாபெரும் வரவேற்பைப் பெற்றார். இக்கூட்டணி மீண்டும் எப்போது இணையுமென்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்ச…

90-களின் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த முன்னணி நாயகியான சிம்ரன், முதன்முறையாகச் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பேட்ட' திரைப்படத்தில் இணைந்து நடித்து மாபெரும் வரவேற்பைப் பெற்றார்.

இக்கூட்டணி மீண்டும் எப்போது இணையுமென்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்மன்' திரைப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து நடிகை சிம்ரன் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள சுவாரசியமான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "எனது ஃபேவரிட் நடிகர் ரஜினிதான்.

நான் அவருடைய வெறித்தனமான ரசிகை. அவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததே இல்லை. அவரிடம் துளியளவும் ஈகோ கிடையாது.

அனைவருடனும் மிகவும் எளிமையாகப் பழகக்கூடியவர். 'பேட்ட' படம் வெறும் டீசர் மட்டும்தான்; அந்தப் படத்தில் வேலை செய்ததை விட, தற்போது அதிகளவு அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அவரிடமே நான் கூறியிருந்தேன். கமலின் தயாரிப்பு மற்றும் ரஜினி நாயகன் என்பது ஒரு மிகப்பெரிய காம்பினேஷன் ஆகும்.

அத்தகைய பிரம்மாண்ட கூட்டணியின் ஒரு பகுதியாக நான் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.