சர்வதேச பொறிமுறையிலான விசாரணை முன்னெடுக்கப்படாமல் செம்மணியின் முழுமையான உண்மைகளை வெளிக்கொணர முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.அவர் நடத்திய ஊடக சந்திப்பொன்றில் வைத்தே இந்த விடயத்தை கூறியுள்ளார். சாட்சியங்கள் அழியும் அபாயம்ச…

சர்வதேச பொறிமுறையிலான விசாரணை முன்னெடுக்கப்படாமல் செம்மணியின் முழுமையான உண்மைகளை வெளிக்கொணர முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.அவர் நடத்திய ஊடக சந்திப்பொன்றில் வைத்தே இந்த விடயத்தை கூறியுள்ளார். சாட்சியங்கள் அழியும் அபாயம்சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு தமிழ்த் தேசியப் பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமலாக்கப்பட்டோருக்கான நீதிப் போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எமக்குள்ளது. காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான நேரடி சாட்சிகளாக இருந்த தாய்மார்கள் மற்றும் வயோதிப பெற்றோர்கள் வயது முதிர்வு மற்றும் இயற்கை மரணம் காரணமாக உயிரிழந்து வருகிறார்கள். காலம் மேலும் கடந்து செல்லும் நிலையில், முக்கியமான சாட்சியங்களும் ஆதாரங்களும் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் சர்வதேச விசாரணைக்கான வாய்ப்பு உருவானாலும் சாட்சியங்கள் இல்லாத நிலை ஏற்பட்டால் நீதியைப் பெற்றுக்கொள்வது கடினமாகிவிடும்.

இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டம்

காணாமலாக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களுக்காகவோ தனிப்பட்ட நலன்களுக்காகவோ காணாமல் ஆக்கப்படவில்லை. அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான போராட்டத்தின் பின்னணியில் காணாமலாக்கப்பட்டவர்கள்.

எனவே, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை தனிப்பட்ட குடும்பங்களின் பிரச்சினையாக மாத்திரம் கருதாமல், ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் நீதிக்கான போராட்டமாக அணுக வேண்டும்.செம்மணி அகழ்வில் முழு உண்மையும் வெளிவருமா? தமிழ் மக்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் மற்றும் அரசியல் தரப்புகள் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். செம்மணியில் தற்போது இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகள் மூலமாக மட்டும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான உண்மைகள் வெளிவரும் என நம்ப முடியாது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.சர்வதேச பொறிமுறையிலான விசாரணை முன்னெடுக்கப்படாமல் செம்மணியின் முழுமையான உண்மைகளை வெளிக்கொணர முடியாது.

அதேவேளை, தீவகப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள கிணறுகள், இராணுவ முகாம்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுவரும் விகாரைகள் அமைந்துள்ள பகுதிகளின் கீழ் புதைகுழிகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகங்கள் மக்களிடையே காணப்படுவதால், அவை தொடர்பில் விரிவான விசாரணைகளும் அகழ்வுப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.