சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவியும் உறுப்பினர் பதவியும் நீக்கப்பட்டதை கண்டித்து, சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) முழுமையான கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையொட்டி, சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்ற…
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவியும் உறுப்பினர் பதவியும் நீக்கப்பட்டதை கண்டித்து, சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) முழுமையான கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையொட்டி, சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து தூக்கி வீசிய குற்றச்சாட்டின் பேரில், உப தவிசாளர் ஞா. கிசோரின் பதவியும் உறுப்பினர் பதவியும் வடமாகாண ஆளுநரின் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நீக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். The post சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்படத்திற்கு எதிராக கடையடைப்பு போராட்டம் appeared first on Battinaatham.

