சாய்ந்தமருதில் டெங்கு நோயாளி அடையாளம் : டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந…

சாய்ந்தமருதில் டெங்கு நோயாளி அடையாளம் : டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், டெங்கு நோயாளி வசிக்கும் வீட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நுளம்பு ஒழிப்பு புகைவிசிரல் (Fogging) நடவடிக்கை சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

டெங்கு பரவலைத் தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாதது என சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், பயன்படுத்தப்படாத டயர்கள், தேங்காய் ஓடுகள், மலர்தொட்டிகள் உள்ளிட்ட நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறும், சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.